சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16 வது ஆண்டு நினைவு தினம்


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் 16 வது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை ( 31.05.2020) கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் அனுஷ;டிக்கப்பட்டது

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தேவ அதிரன் தலைமையில் இடம் பெற்ற அஞ்சலியில் ஊடகவியாலாளர்கள் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன்; திருவுருவப் படத்திற்கு முத்த ஊடகவியலாளர் சிவம் பாக்கிய நாதன் முதல்சுடர் ஏற்றியதையடுத்து எனைய ஊடகவியலாளர்கள் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு அன்னாரது ஆத்மா சாந்திக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்

குறித்த அஞ்சலி செலுத்தும் தினம் அரசு சுகாதார முறைகளுக்கு ஏற்றாற்போல் நடாத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர் சங்கத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments: