திருக்கோவில் பிரதேசத்தில் எதுவித கொரோனா தொற்றும் இல்லை !


திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட பிரிவில் கொரோனாவைரஸ் தொற்று இருப்பதாக மக்கள் மத்தியில்  பரப்பப்பட்டுள்ள செய்தியினால் மக்களிடையே பல சந்தேகங்கள் எழுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் எமது செய்திச்சேவை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது திருக்கோவில் பிரசேத்தில் இதுவரை  கொரோனா தொற்றுள்ள நபர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என எமக்கு தெரிவித்தார்.

எனவே மக்கள் நாட்டின் தற்போதைய நிலைமையை உணர்ந்து  உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளின் பிரகாரம் செயற்படவும்.

No comments: