அம்பாரையில் கொரோனா நோயாளி இனம் காணப்பட்ட பிரதேசம் முடக்கப்பட்டது.
அம்பாறை 

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு சுகாதாரவைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். அகிலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்தபோது 

அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளி இன்று (2020.04.08) இனம் காணப்பட்டுள்ளதனையடுத்து அதனை அண்டியுள்ள பிரதேசங்களை பாதுகாக்கும் பொருட்டு பல முன் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளத அவர் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில்  நாளை  காலை 6 மணிக்கு  ஊரடங்கு தளர்த்தப்படும் போது  ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேசங்களில் வெளி வியாபாரிகள் உள்நுளைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்.

திருக்கோவில் பிரதேசத்திற்கு தேவையற்ற விதத்தில் செல்லும் வாகனங்கள் தடுக்கப்படுமென்றும் தேவை நிமித்தம் திருக்கோவில் பிரதேசத்திற்குள் நுளைபவர்களுக்கு மருத்து தெளித்ததன் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்

மேலும் இன்று (2020.04.08)  இனங்காணப்பட்டுள்ள நோயாளி வசித்த பிரதேசம் முற்றாக முடக்கப்படுள்ளதுடன் நாளை குறித்த நோயாளியின் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை இடம்பெறும் எனவும் குறத்த பரிசோதனையில் வைரஸ் தொ்ற்று உறுதி செய்யப்பட்டால் முழு அக்கரைப்பற்று பிரதேசமும் முடக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments: