கிழக்கில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் !
-அகத்தியன் செய்திப்பிரிவு-
இந் நிலையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதுடன் குறித்த நபரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.
இதேவேளை நாளை ஏப்ரல் 20ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் வரை வழமைபோன்று ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அகிலன் தெரிவித்ததுடன் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.



No comments: