கிழக்கில் மர-முத்தியை விற்பனையாளர்கள் பாதிப்பு !
மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முந்திரியம் பழங்களை விற்பனை செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.
கிழக்கில் வாகரை, மட்டக்களப்பு, தாளங்குடா, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் போன்ற பிரதேசங்கள் மரமுந்திரியச் செய்கைக்குப்பேர்போன இடங்களாகளாகும். ஓவ்வொருவருடமும் பங்குனி, சித்திரை மாதங்களில் இங்கு அதிகளவிலான முந்திரியம் பழங்கள் அறுவடைசெய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும்.
இம்முறை கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் முந்திரியம் பழவிற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு, கிரான்குளம் பிரதானவீதிகளில் முந்திரியம் பழம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளபோதிலும் சனநடமாட்டம் இன்மையினால் அதனை வாங்கிச் செல்வதற்க்கு எவரும்வருவதில்லை எனவும் இதனால் அனைத்துப்பழங்களும் பழுதடைந்து தினமும் வீசப்படுவதாகவும் முந்திரியம்பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான முந்திரியச் செய்கையாளர்களுக்கு அரசும், அதிகாரிகளும் நிவாரணம் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என கேட்கின்றனர்.


No comments: