திருக்கோவில் சங்கமன் கிராமத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது !!


-அகத்தியன் செய்திப்பிரிவு-

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட சங்கமன் கிராமம், மற்றும் திருப்பதி ஆகிய கிராமங்களுக்கு   Markandu  Kanagarajah Family 
( Germany) Vellauthampillai Kanagammah Family  Sammanthurai  .ஆகியோரின்  ஏற்பாட்டில் கொரோனா அச்சத்தால் வாழ்வாதாரத்தினை இழந்து பாதிக்கப்பட்டுள்ள 100 குடும்பங்களுக்கான  உலர் உணவுப் பொதிகள் இன்று (2020.04.19)வழங்கிவைக்கப்பட்டது.

பல கண்டுபிடிப்புக்களை கண்டு பிடித்து இளம் விஞ்ஞானி என பெயர் பெற்று நம் நாட்டிற்கு பெயர் சேர்த்த சோ.வினோஜ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிவாரணப்பணியில் காரைதீவு சமூக சேவை  செயற்பாட்டாளர் கி.ஜெயசிறில், சிரேஷ்ட ஊடகவியலாளர் த.சகாதேவராஜா,திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், உதவி பிரதேச செயலாளர் க.சதீஸ்கரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளரும் கிராம நிலாதாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இளம் விஞ்ஞானி வினோஜ் குமார் தலைமையில் ஏழை மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் பல முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





























No comments: