ஊரடங்கு சட்டத்தை மதித்து புத்தாண்டு கொண்டாட்டத்தை மட்டுப்படுத்திய ஜனாதிபதிநாட்டின் பாதுகாப்பு பிரிவினால் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மதித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சொந்த ஊருக்கு செல்லாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

2020 சிங்கள தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களை மிரிஹானவில் அமைந்துள்ள வீட்டில் இருந்தே குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் இணைந்து மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

#Covid_19  #Coronavirus  #SriLanka  #lka  #Political  #SLNo comments: