அரசாங்கத்தின் 5000 விசேட கொடுப்பனவு பெறுவதற்கு தகுதியான துறையினர் விபரம்


வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பிரிவினரை தெரிவு செய்து அவர்களுக்கான விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் செயற்பாடானது இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் கீழ் தெரிவு செய்யப்பட்டோருக்கு சமூக நலன் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு மேற்கொள்ளதாகவும் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி நிறுவனங்கள் மத்திய அரசு உள்ளிட்ட அரச அலுவலங்களினால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய முன்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பஸ் சாரதிகள் நடத்துநர்கள் ஆயுர்வேத வைத்தியர்கள் வருமானத்தை இழந்துள்ள சிறு தேயிலைதோட்ட உரிமையாளர்கள் தொழிலை இழந்துள்ள பெண் த​லைமைத்துவ குடும்பங்கள் ஊடகவியலாளர்கள் என பலர் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

No comments: