தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு நீக்கம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல் !


தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் ,காலை நேரங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் அரசாங்க சேவைக்கு 20 வீதமான அரச ஊழியர்கள்  அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அடுத்த வாரம் முதல் பகுதியளவில் இலங்கையை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை,எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் தனியார் துறையினர் பணி செய்வதற்கான நேரமாக காலை 10 மணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் பிரிவின்  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அனைத்து ஊரியர்களும் இரவு 8 மணிக்குள் அவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதுடன் 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பரவலால் நிலை குலைந்துள்ள இலங்கையை மீளமைக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவின் அறிவிப்பு




No comments: