வாழைச்சேனையில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உலர் உணவு பொதிகள் !


(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொவிட் 19 வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனம் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகிறது.

அந்தவகையில், கல்குடா தொகுதியில் வறுமைக் கோட்டின் கீீழுள்ள பல குடும்பங்களுக்கு குறித்த உதவித் திட்டம் புதன்கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டது.

முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் ஓட்டமாவடிக் கிளை உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.சப்ரின் தலைமையில் கிளையின் மற்றுமொரு உதவி முகாமையாளர் சப்ராஸ், உத்தியோகத்தர்களான எம்.ஸப்ரி, எம்.சிஹாஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வீடுகளுக்குச் சென்று உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


No comments: