இரண்டு அரச சேவைகளுக்கு TIN இலக்கம் தேவை இல்லை
நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் வரி செலுத்துவோர் இலக்கம் ரின் நம்பர் இலங்கையில் 09 அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டாயமாக்கப்படதுடன் அதன் சான்றிதழும் சமர்ப்பிக்க வேண்டும் என இறைவரி திணைக்களம் அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு கொழும்பு உள்ளிட்ட இறைவரி திணைக்கள அலுவலகம் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரின் இலக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றுச் சென்றனர்.
இதனை தொடர்ந்து இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் நாளிந்த ஜயதிஸ்ஸ வாகன ஆண்டு லைசன்ஸ் பெறுவதற்கும் வங்கியில் புதிய கணக்கினை ஆரம்பிப்பதற்கும் ரின் இலக்கம் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவை இல்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
No comments: