அரச சேவைகளில் இன்று முதல் TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
திங்கட்கிழமை முதல் எந்தவொரு வங்கியிலும் புதிய வங்கிக் கணக்கைத் திறப்பதற்கு வரி செலுத்துநர் அடையாள எண் (TIN) கட்டாயம் தேவைப்படும்.
2026.11.01 ஆம் திகதி முதல் பின்வரும் பணிகளைச் செய்வதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்படும் TIN இலக்கம் அவசியம்
1. ஏதாவது நிதி நிறுவனங்களில் கணக்கொன்றைத் திறப்பதற்கு
2. கட்டடப் படம் (Building Plan) அனுமதி பெறுவதற்கு
3. வாகனமொன்றைப் பதிவு செய்வதற்கு
4. வாகனத்தின் லைசன்ஸ் புதுப்பிப்பதற்கு
5. காணி உரிமம் மாற்றுவதற்கு
6. வியாபாரப் பதிவுக்கு
7. கம்பனி பங்குகள் மாற்றுவதற்கு
8. கிரடிட் கார்ட் பெறுவதற்கு
9.வாகன வரி அனுமதிப்பத்திரத்திற்கு
உள்நாட்டு இறைவரித் திணைக்கள சுற்றறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

No comments: