அக்கரைப்பற்று கன்னகிபுரத்தில் யானை அட்டகாசம் அச்சத்தில் மக்கள்

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கன்னகிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டு யானை புழக்கமானது காணப்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புக்குள் உட் புகும் காட்டு யானையினால் தமக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படுவதாவும் தமது உடமைகளை பாதுகாக்க பாரிய சவால்களை எதிர் கொள்வதாகவும் கன்னகிபுரம் மக்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கடந்த காலங்களில் யானை தாக்குதலுக்குள்ளாகி பல உயிர்கள் பலிமாகியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளை இது தொடர்பில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், அதிகாரிகளிடம் மகஜர் என்பன கையளித்தும் இது வரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கன்னகிபுரம் சனசமூக நிலைய தலைவரும் நப்சோ நிறுவன செயற்பாட்டாளருமாகிய கோகுலன் எமக்கு தெரிவித்தார்.

மேலும் நேற்றிரவு (19) 10:30 pm. மணியளவில் மக்கள் குடியிருப்பிற்குள் உற்புகுந்த காட்டு யானைகளால் பத்துவீட்டு திட்டத்தில்  மயில்வாகனம் என்பவரின் வீட்டின் ஒரு பகுதியினையும் பயிர் நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



No comments: