SPAND அமைப்பினால் ஆசிரியர்களுக்கான சுய ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது
இளைஞர்களின் நல்லொழுக்க வளர்ச்சியையும் தலைமைத்துவ திறமைகளையும் வளத்து கொள்வதன் மூலம் அறிவு உயர் அக்கறையுடைய அனைத்து வளங்களுடனும் கூடிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற நோக்குடன்
அவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு ஸ்பாண்ட் ( 𝗦𝗣𝗔𝗡𝗗 ) மாணவர்களின் மேம்பாட்டிற்காக
பல்வேறுபட்ட நிகழ்வுகளினை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் நேற்றைய தினம்(27.11.2023) மென் திறன் விருத்தி தொடர்பான ஒரு செயலமர்வினை நாவிதன்வெளி கிராமத்தில் கமு /சது/நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் நடாத்தியிருந்தது.
"வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success - S3) எனும் தலைப்பில் தரம் 9 - 13 மாணவர்களுக்கும் "சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி" (Team Effort for Better Results - TEBR) எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சியினை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக நடத்தப்பட்டது.
பயிற்சியாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு ஆலோசகர், KTP ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவன நிறுவுநர் K.T.பிரஷாந்தன் ஐயா அவர்கள் ஸ்பாண்ட்

அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைய 2வது முறையாகவும் இலவசமாக குறித்த பயிற்சியினை வழங்கியிருந்தார்.
பாடசாலையில் மேற்குறித்த செயலமர்வினை நடாத்துவதற்கு சிறப்பான தொடக்க நிறைவு உரைகளை கல்லூரியின் அதிபர் திருமதி.நிலந்தினி ரவிச்சந்திரன்
வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில் சிறப்பான முறையில் ஈடுபட்டு துலங்கலை வழங்கியிருந்த பாடசாலையின் அனைத்து சமூகத்தவர்களுக்கும் ஸ்பாண்ட் அமைப்பு நன்றிகளைத் தெரிவிப்பதாக அதன் பிரதானி குறிப்பிட்டார்.
நிகழ்வில் ஸ்பாண்ட் அமைப்பின் தலைவர் திரு.ராஜன் சுவோஜன்,மூத்த உறுப்பினர் தென்கிழக்கு பல்கலைக்கழக சிங்கள பாடநெறி விரிவுரையாளர் திருமதி.R.சந்திரகுமாரி,திரு கஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: