ஒரு ஓவரில் 05 விக்கட்டுக்களை கைப்பற்றிய மருது விளையாட்டு கழக வீரர்
அக்கரைப்பற்று கோளாவில் காந்தி விளையாட்டு கழகம் நடாத்திய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் இன்று (14) இடம் பெற்றது.
அணிக்கு 08 பேர் பங்கு பற்றும் குறித்த போட்டி தொடர் 05 ஓவர்களை மட்டுப்படுத்தியதாக அமைந்தது.
அக்கரைப்பற்று ஜொலிபோஸ் விளயாட்டுகழகம் மற்றும் மருது விளையாட்டுகழகம் இறுதி போட்டியில் பங்கு பற்றின.
இதன் போது அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
மேலும் இன்றைய போட்டியில் பனங்காடு அக்கினி விளையாட்டு கழகத்துடன் தமது முதலாவது போட்டியை எதிர் கொண்ட மருது விளையாட்டுகழகம் வெற்றி பெற்றதுடன் அதன் பந்து வீச்சாளர் யுரேசாந்த் ஒரு ஓவரில் 05 விக்கட்டுக்களை கைப்பற்றி அணியினை இறுதி வரை செல்ல பலமாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: