அக்கரைப்பற்று பத்திரகாளி அம்மன் ஆலய உற்சவம் (15 ல்) ஆரம்பம்

அக்கரைப்பற்று பதியில் குடி கொண்டு தன்னை நாடிவரும் பக்த அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திகாளி அம்மன் ஆலய 2023 வருடாந்த உற்சவ திருவிழாவானது எதிர்வரும் 2023.10.15 அன்று கணபதி ஹோமத்துடன் அன்னையின் திருக்கதவானது திறக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் பூசை வழிபாடு, கிரியைகள் இடம் பெற்று 11வது நாள் தீமிதிப்பு மற்றும் அதனை தொடர்ந்து இடம் பெறும் ஆயுத பூசையுடன் இவ் ஆண்டிற்கான உற்சவம் இனிதே நிறைவு பெறும்

21ம் திகதி புதன் கிழமை தேரோட்டம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: