மாகாண மட்ட குழு நாடகப் போட்டியில் முதலாம் நிலை பெற்றது கோமாரி மெ.ம.த.ம.வித்தியாலயம்

நடை பெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்சியில் குழு நாடாக பிரிவில் பங்குபற்றி திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோமாரி மெதடிஸ்ம மிசன் தமிழ் மகாவித்தியாலயம் மாகாண மட்டத்தில் முலாம்   நிலை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் பாடசாலை வரலாற்றில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல் தடவை என பாடசாலை அதிபரும் பொத்துவில் தமிழ் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி திரு.ரி.உதயகுமார் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த மாதம் வெளியிடப்பட்ட உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கோமாரி மெ.மி.த.ம.வித்தியாலயம் பாடசாலை வரலாற்றில் அதிகூடிய அடை மட்டத்தினை அடைந்துள்ளதுடன் பொத்துவில் தமிழ் பிரிவு கோட்டம் கல்வி வளர்ச்சி ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் திருக்கோவில் வலயம் இரண்டாம் நிலை பெற்றதுடன் வரலாறு காணாத அடைவு மட்டத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: