திருக்கோவில் குடிநிலம் பகுதியை சேர்ந்த இளைஞன் விபத்தில் பலி

திருக்கோவில் பிரதேச செயலாளர் பகுதியில் சாகாமம் குடிநிலம் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் இன்று (16) மாலை ஏற்பட்ட விபத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை ஏற்பட்ட பலத்த காற்றின் போது 21 வயதுடைய நிதர்சன் என்ற  இளைஞர் சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளியில் பாய்ந்துள்ளது.

இதன் போது இளைஞர்கள் குறித்த இளைஞனை வைத்தியசாலை கொண்டு செல்லும் வேளை உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் கருத்து தெரிவித்தனர்.

குறித்த விபத்திற்கு குடிநிலம் சாகாமம் பிரதான வீதியில் இடம் பெற்றுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: