திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் கரடி தாக்குதலுக்குள்ளாகி நபர் வைத்தியசாலையில் அனுமதி

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு காட்டு பகுதியில்  விறகு எடுப்பதற்காக சென்ற ஆண் ஒருவரை கரடி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் திருக்ககோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்டதிருக்கோவில் 04 சின்ன தோட்டம் காயத்திரி கிராமத்தை சேர்ந்தவர் 41வயதுடை ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்

இவர் இன்று (18)காலை விறகு எடுப்பதற்காக குறித்த காட்டுப்பகுதிக்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளாகிய நபர் பலத்த காயங்களுடன் திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக அம்பாறை வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

J.K JATHURSHANNo comments: