திருக்கோவில் பிரதேசத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மிதுஷன் (திருக்கோவில்)
திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (09)பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கணிதபாட பிரிவில் கல்வி பயின்ற தனுஷன் என்ற மாணன் இவ்வாறு இன்று பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் திருக்கோவில் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: