நாடளாவிய ரீதியில் திருக்கோவில் றூபஸ் குளத்தில் உயர் மழை வீழ்ச்சி பதிவு

கடந்த இரண்டு நாட்களாக அம்பாறை மாவட்டத்தில் அடிக்கடி மழை பெய்து வருகின்றதுடன் காலநிலை தளர்ச்சியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் முழு இலங்கையையும் ஒப்பிட்டு இன்றைய தினம் இது வரையிலான உயர் மழைவீழ்ச்சி , உயர் வெப்பநிலை, இழிவு வெப்பநிலை தொடர்பான அறிக்கையினை  வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் றூபஸ் குளம் பகுதியில் 20மீமீ உயர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் உயர் வெப்பநிலை கட்டுநாயக்க பகுதியிலும் இழிவு வெப்பநிலை நுவரெலியா பகுதியிலும் பதிவாகியுள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.


No comments: