அரசியலமைப்பு பேரவை தொடர்பாக சபாநாயகர் வெளியிட்ட தகவல்



சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன எதிர்வரும் 9ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ் கலந்துரையாடலில் நிதி ஆணைக்குழு, கொள்வனவு ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, கையூட்டலுக்கு எதிரான ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, பொது சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கே புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியமனம் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார் .


No comments: