கடற்பரப்பில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை சடலமாக மீட்பு
நேற்று (06) கஹமொதர, மாதெல்ல துறைமுக பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கடற்பரப்பில் நீராடச் சென்றநிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஹுங்கம கடற்பரப்பில் இரு வெளிநாட்டு பிரஜைகள் மது அருந்திவிட்டு கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் நீண்ட தேடுதலின் பின்னர் பிரதேசவாசிகள் மூலம் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
No comments: