காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ள பொலிசார்

மாவனல்ல உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய கீதாஞ்சலி ரத்நாயக்க என்ற பெண் கடந்த ஜனவரி 18 முதல் காணாமல் போயுள்ளார்

குறித்த பெண்ணை கண்டுபிடிப்பதற்காக பொலிசார் பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.

குறித்த பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய தகவல்களை வழங்குவதற்கு மாவனல்ல பொலிஸ் நிலையத்தின் 035- 2247222 அல்லது 071- 8591418 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


No comments: