வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு



இன்று (07.03.2023) வவுனியா - குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்ககையில் நால்வர் அடங்கிய குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் வவுனியா - குட்செட் வீதி , அம்மா பகவான் பகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது42), கௌ.வரதராயினி (வயது36), இரு பிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

கணவன் தூக்கில் தொங்கியவாறும், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.


இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments: