இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி - ஃபிட்ச் நிறுவனம்

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என  மேலும்  தெரிவித்துள்ளது.

பலவீனமடைந்து வரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு அது ஒரு சவாலாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390 ஆக குறையலாம் என ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது. 


No comments: