24 மணிநேர நீர்வெட்டு - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைஎதிர்வரும் சனிக்கிழமை (4) பிற்பகல் 2 மணிமுதல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (5) பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியினுள், கொழும்பு 1,2,3,4,7,8,9,10 மற்றும் 11 வரையான பகுதிகளுக்கும், கடுவலை நகரம் அதனை அண்டிய பகுதிகளுக்கும் இவ்வாறு நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

முடிந்த வரை தேவையான நீரை சேமித்து வைக்குமாறும் குறித்த சபை தெரிவித்துள்ளது.


No comments: