லிற்றோ எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதோடு, புதிய விலையாக 4,743 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

 5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு விலை 134 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 1,904 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. 

2.3 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதோடு, புதிய விலையாக 822 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments: