மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு

 


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு இன்னும் சரியான தீர்வு வழங்கப்படவில்லை எனவும், மருத்துவ சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சின் மருந்துக் கடைகளிலும் பிராந்திய மருந்துக் கடைகளிலும் மிகக் குறைந்த அளவே மருந்துகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் மருந்துத் தட்டுப்பாடு மோசமடைந்துள்ளதுடன் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் 1,300 வகையான மருந்து வகைகள் உள்ள போதிலும் 140 முதல் 150 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments: