மாகந்துர மதுஷின் சகா கஞ்சாவுடன் கைது

 


பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான மாகந்துர மதுஷின் சகா ஒருவரை நவகமுவ பிரதேசத்தில் வைத்து, கேரள கஞ்சாவுடன் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் மதுஷுடன் துபாயில் முன்னர் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர் எனவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

சிறிய லொறி ஒன்றில் தேங்காய் விற்பனை என்ற போர்வையில் வட பகுதிக்குச் சென்ற சந்தேக நபர், அங்கு கேரள கஞ்சாவை மொத்தமாக விலைக்கு வாங்கி, கொழும்பில் விற்பனை செய்து வந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய, நவகமுவ பிரதேசத்தில் வைத்து நேற்று (11) இரவு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments: