இருவேறு மாவட்டங்களில் இடம்பெற்ற சம்பவத்தில் மூவர் பலி

 

நேற்றைய தினம் மூன்று  படு கொலைகள்பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, மூதூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மூதூர் புளியடிச்சோலை கங்குவேலியில் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட தனிப்பட்டமுரண்பாட்டால்  ஒருவர் பலி ஆகியுள்ளார்.

குறித்த நபர்  கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி  மாவட்டத்தில் உருத்திரபுரப் பகுதியில் உள்ள வீட்டில்  நுழைந்த சிலர், அங்கு இருந்த மூவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகி  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவ் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு  யாழ்ப்பாணம்  அத்தியடியில்  வசிக்கும் பெண்ணொருவரும் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.
  
குறித்த பெண்ணின் வீட்டில் வேலை செய்த  நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இக்கொலையை செய்துள்ளதாக முதல் கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசரணையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: