வௌிநாட்டு பணியாளர்களிடமிருந்தான நேரடி வைப்புத்தொகை வீழ்ச்சி
2022 ஆம் ஆண்டில் வௌிநாட்டு பணியாளர்களிடமிருந்து கிடைத்த நேரடி வைப்புத்தொகை 3,789 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த தொகை 5,491 மில்லியன் டொலரால் குறைந்து 31% வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனிடையே, 2022 ஆம் ஆண்டு வௌிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் 2,99,934 பேர் நாட்டிலிருந்து சென்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்திற்குள் 26,506 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த 07 ஆம் திகதி வரை 1,29,051 வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் 1,20,545 வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இது கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 24.6% அதிகரிப்பாகும்.
No comments: