100 கோடி டொலர் கடனில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

 இலங்கை விமான நிறுவனம் 100 கோடி அமெரிக்க டொலர் கடன் செலுத்தவேண்டிய நிலையில் இருப்பதாகவும், இந்த கடன் மற்றும் வட்டி செலுத்தும்போது நிறுவனத்துக்கு எந்தவொரு இலாபமும் கிடைக்காது என்றும் துறைமுக மற்றும் விமானசேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சபையில் அறிவித்தார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பயன்படுத்தி, இயந்திர கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள மூன்று விமானங்களுக்கான குத்தகையை அந்நிறுவனம் செலுத்தி வருகின்றது.

குறித்த விமானங்களால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ{க்கு எந்தவிதமான வருமானமும் கிடைக்காத போதிலும் குறித்த விமானங்களுக்கான குத்தகை செலுத்தப்பட்டு வருகிறது.

 சீனாவுக்கான விமான சேவைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், சீனாவுக்கான விமானங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் ஆராயும்போதே குறித்த விடயம் கண்டறியப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
No comments: