மார்சுக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய நடவடிக்கை!

எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், தேவையான சீருடைகளில் 70 வீதத்தை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

பாடசாலை சீருடைகளின் முதல் தொகுதி சீன அரசாங்கத்தால் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

மீதமுள்ள 30 வீத சீருடைகள், உள்ளூர் தனியார் வணிகர்களால் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறினார்.No comments: