13 ஆம் திருத்தத்துக்கு எதிராக கொழும்பில் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, சுமார் ஐயாயிரம் பௌத்த பிக்குகள் இன்று கொழும்பு நோக்கி பயணிக்க உள்ளனர்.
இன்று காலை அவர்கள் கொழும்பு நோக்கி பயணிக்க உள்ளதாக மைத்ரி நிக்காயே பௌத்த பிக்குகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
முற்பகல் 9.30 க்கு விக்டோரியா பூங்காவுக்கு அருகில், அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, அதன் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, சகல உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவை வழங்கியுள்ளனர்.

No comments: