அரச செலவுகள் குறைப்பினால் தேர்தலுக்கு பாதிப்பா ?

தேர்தலுக்கான செலவை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார்.

மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதேனுமொரு வகையில் திறைசேரியிடமிருந்து கோரப்பட்டுள்ள நிதி கிடைக்காமல் போகும் பட்சத்தில், அது பிரச்சினையை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.

செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் மேலும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



No comments: