விவசாயிகளின் நிவாரணத் தொகை மீளப் பெறப்பட்டது

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் நெற்செய்கை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 1200 மில்லியன் ரூபா தவறான கணக்கு இலக்கங்கள் காரணமாக திணைக்களத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அரசு நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு பத்தாயிரம் ரூபாவு ம், இரண்டு ஹெக்டேருக்கு இருபதாயிரம் ரூபாவும் , விவசாயிகளின் கணக்கில் வைப்புச் செய்தது.

ஆனால், சில விவசாயிகள் பணம் கிடைக்கப்பெறவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர். தவறான கணக்கு இலக்கங்கள் காரணமாக 1200 மில்லியன் ரூபா பணம் மீள வந்துள்ளதாகவும், அதிகாரிகளின் தவறுகளினால் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விவசாய அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


No comments: