பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட இருவர் கைது

 


நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட இருவர் பொலிஸாரால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த தேரர்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முற்பட்டபோது, பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டோர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments: