ஆரையம்பதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் கூறி பணமோசடி செய்த நபர் கைதுசந்தேக நபர் ஒருவர் பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக பொலிஸ் விசேட பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் அடிப்படையில் பல கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய மைக்கல் மணிமேகலன் என்பவர் நேற்று (23) கல்முனை அரச பேரூந்து நிலையத்தில் வைத்து கைதாகி உள்ளார்.

கைதான நபரை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விசாரணையின் போது குறித்த நபர் வங்கி கணக்கின் ஊடாக பலரிடம் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை தெரிந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் கடவுச்சீட்டுக்கள் மீட்டு உரிமையாளர்களிடம் கையாளித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: