கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக முறைப்பாடு
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்வியியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு குறிப்பாக அட்டாளைச்சேனை, வவுனியா கல்வியியற் கல்லூரிகளில் மேற் குறித்த இரண்டு பாடங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு நீதிக்கான மய்யம் கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவில் இன்று (08) முறைப்பா டொன்றினை செய்துள்ளது.
நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச். இஸ்மாயில், சிரேஷ்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்ணான்டோ, நீதிக்கான மய்யத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான் ஆகியோர் இணைந்து குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: