அஞ்சல் வாக்கெடுப்பு பிற்போடப்படுகின்றது ?

குறித்த நேரத்திற்கு வாக்குச்சீட்டுகள் கிடைக்காமையினால் எதிர்வரும் 22,23,24 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த நேரத்திற்கு வாக்குச்சீட்டுகள் கிடைக்காமையினால்க அஞ்சல் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

 மேலும் அஞ்சல் வாக்கெடுப்பு திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments: