சம்மாந்துறை பிரதேச சபைக்கு புதிய தவிசாளரார் தெரிவு

ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா செய்தமையினால் பிரதேச சபையின் புதிய தவிசாளர்தெரிவுக்கான விசேட அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் சபாமண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. 

அதன் பிரகாரம் பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற அமர்வில் பிரதேசசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் பெயர் மாத்திரமே தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டன.

 இதனால் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் அவர்களினால் ஏகமனதாக சம்மாந்துறைபிரதேச சபையின் தவிசாளராக ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் பெயரை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆறு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டுஉறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பத்து உறுப்பினர்கள் இன்றையசபைக்கு சமூகமளித்தனர்.

இதில் அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி, கிழக்கு மாகாணஉள்ளூராட்சி திணைக்களத்தின் புலனாய்வு உத்தியோகத்தர் விசேட தரம் என்.ஐங்கரன், சம்மாந்துறை பிரதேசசபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், உதவித் தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.No comments: