மர்மமான முறையில் காணாமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு

மர்மமான முறையில் காணாமல் போயிருந்த வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த ரொஷான் வன்னிநாயக்க என்ற 49 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் தலங்கம பெலவத்தை பகுதியில் உள்ள அவரது ஆடம்பரமான மூன்று மாடி வீட்டின் நீச்சல் தடாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 30 ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற தனது சகோதரர் இதுவரை வீடு திரும்பவில்லை என கடந்த 1ம் திகதி உயிரிழந்தவரின் சகோதரி வெல்லம்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வர்த்தகரின் மர்ம மரணம் தொடர்பில், நீதவான் விசாரணை மற்றும் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.No comments: