குடாரப்பு கடற்கரையில் மீனவரின் சடலம்



கரிதாஸ் வீதி, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு இடத்தை சேர்ந்த(39) வயதுடைய பி. ரவிச்சந்திரன் என்ற மீனவரே சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

குடாரப்பு கடற்கரைக்கு ஞாயிறு (12) மாலை படகில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இருவர் படகு கவிழ்ந்து ஒரு மீனவர் கரைசேர்ந்ததாகவும் ஒரு மீனவர் கடலில் மூழ்கி காணமால்ப் போயுள்ளார்.

நேற்று (14) அதிகாலையில் குடாரப்பு கடற்கரையில் குறித்த நபரின் சடலம் கரையோதுங்கியது.

திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ். சிவராசா பிரேத பரிசோதனைக்கு சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

No comments: