தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து!

 

நேற்று (22) பண்டாரவளை எடம்பிட்டிய வீதியின் உடமல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

லொறி ஒன்றின் பிரேக் செயலிழந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி உட்பட காயமடைந்த 22 தொழிலாளர்களும் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments: