அக்கரைப்பற்று மொட்டையாகல் பகுதியில் யானையின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  ஸ்ரீலங்கா ராணுவ 11ஆம் படைமுகாம்  A பிரிவின் எல்லைக்குட்பட்ட அலிகம்பே, மொட்டைமலை, கூளவாடி பகுதியில் இன்று காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட விசாரனையை  திருக்கோவில் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் இறந்த யானையின் பிரேத பரிசோதனைக்கான நடவடிக்கைகளும் திருக்கோவில் வனஜீவராசிகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஜே.கே.யதுர்ஷன்No comments: