சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020-2021ஆம் ஆண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கு கால வரையறயின்றி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மாணவர்களை இன்று மாலை 4 மணிக்குள் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உதயரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவபல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்குகிடையில் நேற்று இடம் பெற்ற மோதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் பாதிக்கப்பட்டுள்ள 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: