பிரபாகரன் உயிருடன் இருப்பதென்பது உண்மைக்கு புறம்பானது- பாதுகாப்பு அமைச்சு
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் டிஎன்ஏ பரிசோதனையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி ஒருவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது நேற்று தெரிவித்திருந்தார்.
தமிழினத்தின் விடுதலைக்காக பிரபாகரன் விரைவில் மக்கள் மத்தியில் வருவார் என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
No comments: