எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதல்

QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நேற்று (16) இரவு 11 மணியளவில் யாழ். நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஊழியர் கையில் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.






No comments: