உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கொத்தணிக்கு நடந்த சோகம்
ஒரு டொலருக்குக் கூட விற்பனையாகாத உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கொத்தணி மீண்டும்
நாட்டுக்கு.
கடந்த ஆண்டு இரத்னபுரி பல்மடுல்ல பகுதியில் உள்ள சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கொத்தணியை யாரும் கொள்வனவு செய்யாததால் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையம் தலையிட்டு இதனை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது.ஆனால் அதனை கொள்வனவு செய்ய யாரும் முன்வராததால் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்தார்.
சுமார் 510 கிலோகிராம் எடையுள்ள இந்த ரத்தினம் 100 மில்லியன் டொலர்களை தாண்டும் என்று ஆணையம் முன்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: